மாமல்லபுரம் கடற்கரையில் தமிழக முதல்வரின் 160 அடி மணல் சிற்பம்

மாமல்லபுரம்: மாமல்லபுரம் கடற்கரையில், திருக்கழுக்குன்றம் அதிமுக கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் ராகவன் ஏற்பாட்டில், 50 டன் மணற்பரப்பில், தரையில் இருந்து 20 அடி உயரத்தில் 160 அடி நீளம் கொண்ட  முதல்வர் எடப்பாடி  பழனிச்சாமியின் முழு உருவ மணல் சிற்பத்தை மாமல்லபுரம் சிற்பக் கல்லூரி மற்றும் கும்பகோணம் கவின் கல்லூரியை சேர்ந்த 16 மாணவர்கள் வடிவமைத்தனர்.

இந்த மணல் சிற்பத்தை நேற்று தமிழ் வளர்ச்சி, பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் மாஃபா கே.பாண்டியராஜன் கொடியசைத்து திறந்து வைத்து நிருபர்களிடம் கூறியதாவது:  இந்த சிற்பத்தை விமானத்திலிருந்துகூட பார்க்க முடியும்.  இங்கு வரும் உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இங்குள்ள புராதன சின்னங்களை கண்டுகளிப்பது போல் இந்த மணல் சிற்பத்தைப் பார்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: