ஜெயலலிதா வழிபட்ட கோயிலில் சசிகலாவுக்காக அமைச்சர் பூஜை?

சென்னை: பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள அய்யாவாடி பிரத்தியங்கராதேவி கோயிலுக்கு நேற்று வந்தார். பின்னர், ‘நிகும்பலா’ யாகத்தில் கலந்து கொண்டு ரகசிய பூஜை செய்து விட்டு  சென்றார். இந்த ரகசிய பூஜையில், சில அதிமுக நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: இந்த கோயிலில் அமாவாசை தினத்தன்று நடைபெறும் ‘நிகும்பலா’ யாகத்தில் கலந்து கொண்டால் எதிரிகளின் தொல்லை விலகும் என்பது நம்பிக்கை. அந்தவகையில், ஜெயலலிதா, சசிகலா ஆகியோர் இங்கு  வந்து வழிபட்டு சென்றனர். அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஏற்கனவே சசிகலாவுக்கு ஆதரவாகப் பேசி வாங்கிக் கட்டிக் கொண்டவர்.

 தற்போது சசிகலா சிறையில் இருந்து விடுதலையாகி வந்திருப்பதால்,  அவரால் தனக்கு எந்த பிரச்னையும் வரக்  கூடாது என்று வழிபட்டிருக்கலாம். இல்லையென்றால் பழைய பாசத்தில் சசிகலாவுக்கு ஆதரவாகவும் வழிபட்டிருக்கலாம். பலிக்காமல் போய்விட்டால் என்ன செய்வது என்று அவர் பிரார்த்தனையை வெளியில் சொல்ல மாட்டார்.  இவ்வாறு அவர்கள் கூறினர்.

தேர்தல் பிரசாரத்தில் ஜெயலலிதா, மோடியா இந்த லேடியா? என்று பேசினார். அப்போதெல்லாம் ராஜேந்திர பாலாஜி ஜெயலலிதாவை அம்மா, அம்மா என்று அழைத்து வந்தார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ‘மோடிதான் எங்க டாடி’ என்று  கூறினார். இப்ப அவரு சின்னம்மாவுக்கு ஆதரவா என்பது அந்த கடவுளுக்கே வெளிச்சம்.

Related Stories: