எம்பி, எம்எல்ஏக்கள் வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தின் பணி என்ன? சென்னை ஐகோர்ட் விளக்கம்

சென்னை: எம்.பி, எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்கும் வகையில், அவற்றை கண்காணிப்பது தொடர்பாக தாமாக முன்வந்து வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டுமென அனைத்து மாநில உயர் நீதிமன்றங்களுக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இத்த அடிப்படையில், உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள முன்னாள் மற்றும் இந்நாள் எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான அவதூறு வழக்குகள் விசாரணையை துரிதப்படுத்தவும், கீழமை நீதிமன்றங்களில் அவர்கள் மீது நிலுவையில்  உள்ள குற்ற வழக்கு விசாரணையை விரைந்து முடிக்கவும் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.அப்போது உயர் நீதிமன்ற பதிவாளர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜய், தனி நீதிபதி நியமனம், வழக்கின் போக்கு போன்றவற்றை எடுத்துரைத்தார்.

தமிழக அரசு சார்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண், தமிழகத்தின் 32 மாவட்டங்களில் உள்ள செஷன்ஸ் நீதிமன்றங்களையே சிறப்பு நீதிமன்றங்களாக செயல்பட அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த வழக்கில் முன்னேற்றம் இல்லை என்றார். இரு தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதிகள், இந்த வழக்கில் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தனர். இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஐகோர்ட் பதிவு துறை சார்பில் ஆஜரான வக்கீல் விஜய், சென்னையில் காலியாக இருந்த நீதிபதி பணியிடம் நிரப்பப்பட்டுள்ளது என்றார். இதை பதிவு செய்ய நீதிபதிகள், இந்த சிறப்பு நீதிமன்றங்கள் எம்பி, எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்க மட்டுமே அமைக்கப்பட்டுள்ளதே தவிர எம்பி, எம்எல்ஏக்கள் மற்றவர்கள் மீது கொடுக்கும் புகார்களை விசாரிப்பதற்காக அல்ல என்று அறுவுறுத்தி விசாரணையை 12 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

Related Stories: