குடிசைப்பகுதிகளில் உள்ள கழிப்பிடங்களை கட்டணமின்றி இலவசமாக பயன்படுத்தலாம்: தெற்கு மாநகராட்சி அறிவிப்பு

புதுடெல்லி: குடிசைகள் மற்றும் ஜேஜே கிளஸ்டர் பகுதிகளில் உள்ள பொதுக் கழிப்பறைகளை கட்டணமின்றி இலவசமாக பயன்படுத்தலாம் என்றுதெற்கு மாநகராட்சி மேயர் அனாமிகா தெரிவித்துள்ளார். இதுபற்றி மேயர் அனாமிகா கூறியதாவது: நிலைக்குழுவின் பரிந்துரையின் பேரில், தெற்கு மாகநராட்சி நிர்வாகம் கடந்த நவம்பர் 1 ம் தேதியன்று அவையில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. இதன்படி, குடிசைகள் மற்றும் ஜேஜே காலனி பகுதியில் செயல்படும் கரிப்பறைகளை பயன்படுத்துபவர்களிடமிருந்து எந்தவொரு கட்டணமும் வசூலிக்கக்கூடாது என்று முடிவு செய்யப்பட்டது. அதோடு, இந்த கழிப்பிடங்களை பராமரித்து வரும் தனியார் நிறுவனங்கள் மாநகராட்சியின் முடிவை மீறி கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கவும் வழிவகை செய்யப்பட்டது. குறிப்பாக, ஒப்பந்தம் ரத்து செய்யப்படும். மாநகராட்சி இடைத்தேர்தலை கருத்தில் கொண்டு ஆம் ஆத்மி கட்சியும் காங்கிரசும் ஒரு குழப்பத்தை  உருவாக்கி வருகின்றன. இதுபோன்ற பகுதிகளில் வசிப்பவர்களிடையே ஒரு ரூபாய் கூட வசூலிக்காமல், அந்த சேவைகளை இலவசமாக வழங்குவதை மாநகராட்சி உறுதி செய்துள்ளது.

Related Stories: