குடிநீர் கட்டணம் செலுத்தாத அமைச்சர்கள் ஜெகதீஷ்ஷெட்டர், ஸ்ரீராமுலு தலா 10 லட்சம் பாக்கி

பெங்களூரு: பெங்களூரு குடிநீர் மற்றும் கழிவுநீர் வடிகால் வாரியத்திற்கு பில் கட்டணம் செலுத்தாமல் இழுத்தடித்து வரும் 100 பேர்களில் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் மாநில அமைச்சர்கள் ஜெகதீஷ்ஷெட்டர், பி.ஸ்ரீராமுலு, பெங்களூரு மாநகராட்சி திட்ட முதன்மை பொறியாளர், பெங்களூரு மத்திய பல்கலைக்கழகம் உள்பட பல பெயர்கள் இடம் பெற்றுள்ளது. குடிநீர் வாரியத்திற்கு 400 கோடி வரை பில் பாக்கி இருப்பதால், கட்டணம் செலுத்தாதவர்களின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.இதில் தொழில்துறை அமைச்சர் ஜெகதீஷ்ஷெட்டர் (ஆர்.ஆர்.எண் சி-149249) படி 15.85 லட்சம் பில் கட்டணம் செலுத்த வேண்டும். இதில் பழைய கட்டணம் 10.66 லட்சம் உள்ளது. சமூகநலத்துறை அமைச்சர் பி.றராமுலு (ஆர்.ஆர்.எண் சி.101317) படி 11.69 லட்சம் கட்டணம் செலுத்த வேண்டும். இதில் 9.28 லட்சம் பாக்கி கட்டணமாகும்.

மாநகராட்சியில் பல அலுவலகங்கள் 1 கோடி வரை கட்டணம் பாக்கி வைத்துள்ளது.  மாநகராட்சி திட்ட பொறியாளர் 34.12 லட்சம், பெங்களூரு மத்திய பல்கலைக்கழகம் 52.78 லட்சம், காந்திநகர் இந்திரா கேன்டீன் 2 லட்சம், சட்டமன்ற உறுப்பினர் பவன் 35.16 லட்சம் கட்டண பாக்கி வைத்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதனிடையில் அமைச்சர்கள் ஜெகதீஷ்ஷெட்டர் மற்றும் ஸ்ரீராமுலு ஆகியோர் பில் கட்டணம் செலுத்தியுள்ளதாகவும் அவர்கள் பெயரில் பாக்கி இல்லை என்று பெங்களூரு குடிநீர் வாரிய தலைவர் என்.ஜெயராம் மறுப்பு தெரிவித்துள்ளார்.

Related Stories: