அடிப்படை வசதி செய்து தரக்கோரி காலிக்குடங்களுடன் பெண்கள் ஆர்ப்பாட்டம்

கூடலூர் : கூடலூருக்கு உட்பட்ட 21 வார்டு பகுதிகளுக்கு அடிப்படை வசதி முறையாக ெசய்து தரக்கோரி தி.மு.க.வினர் நகராட்சி அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. நகர தி.மு.க. செயலாளர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். எம்.எல்.ஏ. திராவிட மணி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.

தலைமை செயற்குழு உறுப்பினர் பாண்டியராஜ் முன்னிலை வகித்தார்.நகராட்சிக்கு உட்பட்ட 21 வார்டுகளில் பல்வேறு பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் சீராக விநியோகம் செய்வதில்லை.ஒரு பகுதிக்கு குடிநீர் வழங்க 10 நாட்களுக்கு மேல் ஆகிறது. வனவிலங்குகள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் தெருவிளக்குகள் எரிவதில்லை.சாலை நடைபாதை உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் முறையாக செய்து தரவில்லை.

இதைக்கண்டித்து நகர தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், பழங்குடியின பெண்கள் காலி குடங்களுடன் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். இதில், தலைமை பொதுக்குழு உறுப்பினர் சீனி, கா.ராஜா, நகர நிர்வாகிகள் ஏ.எம்.ரசாக், ஜபருல்லா, நாகேஸ்வரி, இளஞ்செழியன், வழக்கறிஞர் முருகன், ரகு சிவகுமார், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர்  சின்னவர், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: