விவசாயிகள் போராட்டத்தை மதத்துடன் இணைக்க கூடாது : பிரதமர் மோடிக்கு சிரோன்மணி வேண்டுகோள்

புதுடெல்லி : விவசாயிகளின் போராட்டத்தை மதம், சமூகத்துடன் இணைக்க வேண்டாம் என்று பிரதமர் மோடிக்கு சிரோன்மணி கட்சி தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். புதிய விவசாய சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து விவசாயிகள் நடத்தும்  போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருதல் தொடர்பாக நேற்று பிரதமர் மோடி  நாடாளுமன்றத்தில் பேசினார். அப்போது, ‘விவசாய சீர்திருத்தங்களுக்கு ஒரு  வாய்ப்பை வழங்க வேண்டும். விவசாய சீர்திருத்தங்கள் விஷயத்தில் காங்கிரஸ்  ‘யு-டர்ன்’ போட்டுள்ளது. வேளாண் சட்ட விவகாரம் அரசியலாக்கப்பட்டுள்ளது. தவறான தகவல்களை பரப்பாதீர். பிரச்னைகளை தீர்க்க முடியும். இந்தியாவை சீர்குலைக்க சிலர் விரும்புகின்றனர். சிலர் பஞ்சாப் விவசாயிகளை  தவறாக வழிநடத்துகின்றனர்’ என்று பேசினார்.

இதற்கு பதிலளித்துள்ள சிரோன்மணி அகாலிதளம் (எஸ்ஏடி) தலைவர் சுக்பீர் சிங் பாதல், ‘விவசாய சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் இயக்கம் மற்றும் போராட்டத்தை எந்த மதம் மற்றும் சமூகத்துடனும் இணைக்க வேண்டாம். இதனை எனது வேண்டுகோளாக பிரதமர் மோடிக்கு வைக்கிறேன். உணவு உற்பத்தி நலனுக்காக விவசாயிகள் போராடி வருகிறார்கள் என்பதை நாம் அனைவரும் உணர வேண்டும். எனவே, விவசாயிகளுக்கு நீதி கிடைப்பதில் பிரதமர் மோடி கவனம் செலுத்த வேண்டும்’ என்றார்.

Related Stories: