முதல்வர் பிரசாரம் செய்ய இருந்த இடம் அருகில் வெடிகுண்டு, துப்பாக்கி, கத்தியுடன் வாலிபர் கைது: தீவிரவாத கும்பலுடன் தொடர்பா? உளவுத்துறை போலீசார் விசாரணை

குடியாத்தம்:  வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு- ஆம்பூர் சாலையில் நேற்று மாலை 4 மணியளவில் தாறுமாறாக ஓடிய ஒரு கார், அவ்வழியாக சென்ற பைக் மற்றும் கார்கள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதனால் வாகனங்களில் சென்றவர்கள் அந்த காரை பின்தொடர்ந்து சென்றனர். அப்போது கார், குடியாத்தம் அடுத்த மத்தூர் கிராமம் அருகே சாலையோரம் நின்றுவிட்டது. இதையடுத்து காருக்குள் போதையில் இருந்த வாலிபரை பிடித்து பொதுமக்கள் தர்மஅடி கொடுத்தனர். மேலும் மேல்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.  அதன்பேரில், போலீசார் சென்று விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பேசினார். இதன்பின், காரை சோதனை செய்தபோது வெடிகுண்டு, கைத்துப்பாக்கிகள், உறையுடன் கூடிய வாள், கத்தி, மயக்க ஸ்பிரே, தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநில பதிவெண்கள் கொண்ட கார் நம்பர் பிளேட்டுகள், காரின் முன்னால் கட்டுவதற்கான பல்வேறு கட்சி கொடிகள், செல்போன்கள், செல்போன்களை சார்ஜ் செய்வதற்கான பவர் பேங்க், சிம்கார்டுகள் ஆகியன இருந்தது.

மேலும் நிருபர் என்று அடையாள அட்டையையும் வைத்திருந்தார். அதில் இம்ரான் என இதனால், அதிர்ச்சியடைந்த போலீசார், மேல்பட்டி காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். காருடன் அதிலிருந்து பயங்கர ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். இதைத்தொடர்ந்து தனிப்பிரிவு போலீசார் மற்றும் எஸ்பி செல்வகுமார் சென்று அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது, வேலூர் சேன்பாக்கம் அங்காளம்மன் கோயில் தெருவை சேர்ந்த அப்துல்அஜிஸ் (வயது 38) என்றும், இவருக்கு மனைவி, 1 மகன் மற்றும் 3 மகள்கள் இருப்பதும் தெரியவந்தது. இதற்கிடையில் தகவலறிந்த அப்பகுதி மக்கள் காவல் நிலையத்தில் குவிந்தனர். இதையடுத்து, அவரை பேரணாம்பட்டு காவல் நிலையம் அழைத்து சென்றனர். துப்பாக்கி, வெடிகுண்டு ஆகியவற்றுடன் பிடிபட்டு இருப்பதால் இவருக்கு தீவிரவாத கும்பலுடன் தொடர்பிருக்கலாம் என்ற கோணத்திலும் உளவுத்துறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

‘முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பிற்பகலில் குடியாத்தம் அடுத்த கந்தனேரி, கே.வி.குப்பம் அருகே சென்றாயன்பள்ளி பகுதிகளில் தேர்தல் பிரசாரம் செய்தார். சென்றாயன் பள்ளியில் பிரசாரத்துக்கு வரும் சில மணி நேரத்துக்கு முன்புதான் இவர் பயங்கர ஆயுதங்களுடன் பிடிபட்டுள்ளார். தேர்தல் பிரசாரம் நடந்த இடத்தில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் இந்த சம்பவம் நடந்துள்ளதால் போலீசாருக்கு பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளது.

Related Stories: