மைசூரு மாநகராட்சி மேயர், துணை மேயர் இட ஒதுக்கீடு இன்று அறிவிப்பு: அமைச்சர் எஸ்டி சோமசேகர் தகவல்

மைசூரு: மைசூரு மாநகர மேயர் துணை மேயர் இடஒதுக்கீடு இன்று அறிவிக்கப்படும். பின்னர் மேயர் பதவியை பிடிக்க மஜதவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று எஸ்.டி. சோமசேகர் தெரிவித்தார். மைசூருவில் செய்தியாளர்களிடம் அமைச்சர் எஸ்.டி.சோமசேகர் கூறுகையில், ``கடந்த நான்கு மாதங்களாக யத்னால் தினம் ஒரு அறிக்கை வெளியிட்டு வருகிறார். அவர் கூறுவது ஒன்று கூட நடக்கவில்லை. அரசியலில் தன்னை நிலைநிறுத்தி கொள்ளவே அவர் தினம் ஒரு அறிக்கை வெளியிட்டு வருகிறார். அவருக்கு ஆதரவாக கட்சியில் யாரும் இல்லை என்பதால் அவரை பற்றி பெரிதாக கண்டு கொள்ளக்கூடாது.

ஆனால் எடியூரப்பா அரசு கையாலாகாத அரசு என்று எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா கூறி வருகிறார். அவர் எதிர்க்கட்சி தலைவர் பணியை சரியாக செய்து வருகிறாரா? முதல்வர் எடியூரப்பா கொரோனா தடுப்பு நடவடிக்கையை மிக சிறப்பாக கையாண்டு வருகிறார். முதல்வர் ஜாமீனில் உள்ளார் என்று எதிர்க்கட்சியினர் கூறுகின்றனர். எல்லா அரசியல்வாதிகளுக்கும் ஏதாவது ஒரு வழக்கு இருந்து கொண்டுதான் இருக்கும். எந்த அரசியல்வாதிகள் வழக்கு இல்லாமல் உள்ளனர் என்று கூறுங்கள். வரும் புதன்கிழமை(இன்று) மைசூரு மாநகர மேயர் துணை மேயர் இடஒதுக்கீடு அறிவிக்கப்படும். பின்னர் மேயர் பதவியை பிடிக்க மஜதவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும்’’ என்றார்.

Related Stories: