ஏஜென்சிகள் கொடுப்பது 11 ஆயிரம் மருந்தாளுநர்களிடம் கையெழுத்து பெறுவது 15 ஆயிரம்: முதல்வருக்கு புகார் கடிதம்

சென்னை:  சென்னை மாநகராட்சி அனைத்து ஒப்பந்த மருந்தாளுநர்கள் சென்னை, தலைமை செயலகத்தில் முதல்வர் தனிப்பிரிவில் நேற்று அளித்த புகார் மனுவில் கூறி இருப்பதாவது: நாங்கள் ஓராண்டு ஆண்டு முதல் 8 ஆண்டுகள் வரை ஒப்பந்த முறையில் சென்னை மாநகராட்சியின் கீழ் மருந்தாளுநர்களாக பணியாற்றி வருகிறோம். கடந்த 10 மாதமாக விடுப்பு எடுக்கவில்லை. முதலில் 7,500 சம்பளம் வழங்கப்பட்டது. தற்போது 11 ஆயிரம் சம்பளம் வழங்கப்படுகிறது. ஆனால் எங்களிடம் 15 ஆயிரம் பெற்றுக்கொண்டதாக கையெழுத்து பெறப்படுகிறது. இந்த சம்பளமும் மாதத்தின் 15ம் தேதிக்கு மேல்தான் கிடைக்கிறது. எங்களது குறைந்தபட்சம் அடிப்படை சம்பளமாக நாள் ஒன்றுக்கு 900 வழங்க வேண்டும்.

வருடத்திற்கு 24 நாட்கள் மருத்துவ விடுப்பு வழங்க வேண்டும். சென்னை மாநகராட்சியின் கீழ் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்ப்புற சமுதாய நல மருத்துவமனைகளில் 155க்கும் மேற்பட்ட மருந்தாளுநர் பணியிடங்கள் காலியாக உள்ளது. அந்த இடங்களில் எங்களுக்கு நிரந்தர பணியாளர்களாக நியமிக்க வேண்டும். பணி நிரந்தரம் செய்யும் வரை ஏஜென்சியிடம் பணியாற்றுவதை நிறுத்தி விட்டு எங்களை நேரடியாக சென்னை மாநகராட்சியின் கீழ் ஒப்பந்த அடிப்படையில் பணி வழங்க வேண்டும்.  இவ்வாறு மனுவில் கூறி உள்ளனர்.

Related Stories: