நாம் அனைவரும் முட்டாள்களா?.. பிரதமர் மோடியின் மாநிலங்களவை உரையில் எந்தப் பொருளும் இல்லை: காங்கிரஸ் மூத்த தலைவர் பேட்டி

டெல்லி: பிரதமர் மோடியின் மாநிலங்களவை உரையில் எந்தப் பொருளும் இல்லை என காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாடியுள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜன.29-ம் தேதி குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையுடன் தொடங்கியது. அவரது உரையை புறக்கணித்து காங்கிரஸ் உள்ளிட்ட 16 எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு செய்தன. வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும், டெல்லியில் நடந்த வன்முறை தொடர்பாக சார் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், கலவரத்தில் மத்திய அரசின் பங்கு குறித்து விசாரிக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.

இந்நிலையில் இன்று குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி மாநிலங்களவையில் உரை நிகழ்த்தினார். அப்போது கொரோனா, தடுப்பூசி, நாட்டின் வளர்ச்சி உள்ளிட்ட பல விஷயங்களுடன் வேளாண் சட்டம் தொடர்பாகவும் பேசினார். குறிப்பாக வேளாண் சட்டம் மற்றும் விவசாயிகள் போராட்டம் தொடர்பாக பேசிய அவர்; வேளாண் சட்டம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் சுமார் 14 மணி நேரம் ஆலோசனை நடைபெற்றது. வேளாண் சட்டம் தொடர்பான விவாதத்தில் சுமார் 50 எம்பிக்கள் பேசியுள்ளனர்.

வேளாண் சட்டங்களை எதிர்ப்பதில் எவ்வித அர்த்தமும் இல்லை. புதிய வேளாண் சட்டங்களால் விவசாயிகளின் நிலம் பறிபோகாது. வேளாண் விளை பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை தொடரும்.போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான மத்திய அரசின் கதவுகள் திறந்தே உள்ளன என கூறினார்.

Related Stories: