காந்தி மார்க்கெட்டுக்கு வாழைத்தார் வரத்து அதிகரிப்பு-கூடுதல் விலைக்கு ஏலம்

பொள்ளாச்சி : மார்க்கெட்டுக்கு வாழைத்தார் வரத்து அதிகரித்தது. அவை கூடுதல் விலைக்கு ஏலம் விடப்பட்டது.  பொள்ளாச்சி காந்தி மார்க்கெட்டில், வாரத்தில் குறிப்பிட்ட நாட்கள் நடக்கும் வாழைத்தார் ஏலத்தின்போது, சுற்றுவட்டார கிராமங்களில் இருந்தும் உடுமலை, கணியூர், மற்றும், நெல்லை, தூத்துக்குடியில் இருந்தும்  வாழைத்தார்கள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டு, குறிப்பிட்ட விலை நிர்ணயம் செய்து ஏலம் விடப்படுகிறது. பனிப்பொழிவால், நவம்பர் முதல் கடந்த ஜனவரி மாதம் வரையிலும்  வாழைத்தார் அறுவடை குறைந்தது.  

இதன்காரணமாக அனைத்து ரக வாழைத்தார்களும் கூடுதல் விலை நிர்ணயம் செய்யப்பட்டு ஏலம் விடப்பட்டது. சில மாதத்திற்கு பிறகு, இரண்டு வாரத்திற்கு முன்பிருந்து சந்தை நாளில், மார்க்கெட்டுக்கு வாழைத்தார் வரத்து அதிகரித்தது. இருப்பினும், வியாபாரிகள் வருகை அதிகரிப்பால், வாழைத்தார்கள் தொடர்ந்து கூடுதல் விலை நிர்ணயித்து ஏலம் விடப்பட்டது.  

நேற்று நடந்த ஏலநாளில், வெளியூர்களில் இருந்தும், சுற்றுவட்டார பல கிராமங்களில் இருந்தும் வாழைத்தார் வரத்து  ஓரளவு இருந்தது. மேலும், வெளியூர் வியாபாரிகள் வருகை அதிகரிப்பால், அதன் விற்பனை விறுவிறுப்புடன் நடந்தது. இதில்,  செவ்வாழைத்தார் ஒன்று  அதிகபட்சமாக ரூ.1300வரையிலும், மோரீஸ் அதிகபட்சமாக ரூ.650க்கும், பூவந்தார் ரூ.550வரையிலும், சாம்ராணி ரூ.650க்கும், ரஸ்தாளி ரூ.750க்கும், கேரள ரஸ்தாளி ஒருகிலோ ரூ.40க்கும் என கூடுதல் விலைக்கு ஏலம்போனது என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: