திருப்பூர் தெற்கு தொகுதிக்கு பாஜக குறி

திருப்பூர் தெற்கு தொகுதியில் எம்.எல்.ஏவாக அதிமுகவை சேர்ந்த குணசேகரன் இருந்து வருகிறார். இவர் மீண்டும் சீட் வாங்குவதற்கு பெரும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இவருக்கு கட்சிக்குள் பெரிய அளவில் போட்டி இல்லை. அதனால், இவர் எப்படியும் சீட் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் உள்ளார். ஆனால், கூட்டணி சிக்கலில் திருப்பூர் தெற்கு சிக்கிவிடுமோ என்ற அச்சமும் அவரிடம் இருக்கிறது. தெற்கு தொகுதியை பா.ஜ. குறிவைத்து காய் நகர்த்தி வருகிறது. இதற்காக இந்து முன்னணி மாநில பொறுப்பில் உள்ளவர்கள் முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது. எனவே, தனது தொகுதியை தக்க வைத்துக் கொள்ள குணசேகரன் முக்கிய தலைகளிடம் பேசி வருகிறார்.

* ‘ரஜினி கேட்டுக்கிட்டாரு.. நான் கட்சி தொடங்குறத விட்டுட்டேன்’

உடல்நிலை சரியில்லை. அரசியலுக்கு வரவில்லை. என்னை வேதனைப்படுத்தாதீங்க என்று ரஜினியே நேரடியாக அறிவித்த பின்னரும், ரஜினி மக்கள் மன்றம் என்ற பெயரில் அவரது நிர்வாகிகள் அடுத்தடுத்து நடத்தும் அரசியல் களேபரங்கள் விமர்சனத்துக்கு உள்ளாகி உள்ளதாம். ரஜினி அரசியல் கட்சி தொடங்குவார் என நினைத்து, காங்கிரஸ் கட்சியில் விவசாய அணி பொறுப்பில் இருந்த நாகர்கோவிலை சேர்ந்த ஆர்.எஸ்.ராஜன், மக்கள் மன்றத்துக்கு வந்தார். ரஜினி கட்சி தொடங்கவில்லை என அறிவித்ததும் கடுப்பாகி போன அவர், ரஜினி பெயரில் நான் கட்சி தொடங்க போறேன் என்றார். ஆனால், எதுவும் யூஸ் இல்ல என்பதை தெரிந்து ெகாண்ட அவர், கட்சி மேலிடத்தில் இருந்து என்னை தொடர்பு கொண்டார்கள். ரஜினி அரசியலுக்கு வர முடிவு பண்ணிட்டார். எனவே நீங்க கட்சி ஆரம்பிக்க வேண்டாம் என கேட்டுக்கிட்டாங்க. எனவே தானும் அரசியல் கட்சி தொடங்கும் முடிவை தள்ளி வைக்கிறேன் என்று அறிக்கை விட்டதுடன், இதை வாட்ஸ் அப்பில் அவரே பலருக்கு அனுப்ப, கடுப்பாகி போனார்களாம்.

Related Stories: