3வது டெஸ்ட்டில் களம் இறங்கும் ஷமி

இந்திய வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி, கடந்த டிசம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் கம்மின்ஸ் வீசிய பந்தில், மணிக்கட்டில் பந்து தாக்கி காயம் அடைந்தார். இதனால் தொடரில் இருந்து விலகினார். தற்போது காயம் குணமான நிலையில், பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சியை தொடங்கினார். இங்கிலாந்துக்கு எதிராக கடைசி 2 டெஸ்ட் போட்டியில் இடம்பிடிப்பார் என தகவல் வெளியாகி உள்ளது.

Related Stories: