நாடு முழுவதும் 2020ம் ஆண்டு ரிக்டர் அளவு 3க்கு மேல் 965 நிலநடுக்கங்கள்

புதுடெல்லி: நாடு முழுவதும் 2020ம் ஆண்டு ரிக்டர் அளவு 3க்கு மேல் 965 நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளதாக மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் 2020ம் ஆண்டு பதிவான நிலநடுக்கங்கள் குறித்து மக்களவையில் உறுப்பினர் ஒருவர் கேள்வி எழுப்பினர். இதுகுறித்து அமைச்சர் ஹர்ஷ் வர்தன் மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், ‘கடந்த ஆண்டில் (2020) நாடு முழுவதும் ரிக்டர் அளவு 3க்கு மேல் 965 நிலநடுக்கங்கள் பதிவாகின. அதில் 13 நிலநடுக்கங்கள் டெல்லியின் சுற்றுப்பகுதியில் பதிவாகியுள்ளன.

நிலநடுக்கங்கள் குறித்த ஆரம்ப எச்சரிக்கையை வழங்க தற்போது எந்தவொரு நிரூபிக்கப்பட்ட தொழில்நுட்பமும் நாட்டில் இல்லை’ என்று தெரிவித்தார். இதற்கிடையே இடி, மின்னலுடன் கூடிய பெரும் மழை பற்றிய ஆய்வு செய்வதற்காக ஒடிசாவில் ஆய்வு மையம் அமைக்கவுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Related Stories: