விவசாயிகளின் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வருகிறது.: போராட்டத்தை தடுக்க மேலும் பல சாலைகளை அடைந்த டெல்லி போலீஸ்

டெல்லி: விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக டெல்லிக்கு அண்டை மாநில விவசாயிகள் வருவதை தடுக்க பல இடங்களில் போலீசார் தடுப்பு வைத்தது அடைத்துள்ளனர். மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப் , அரியானா உள்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் பலர் டெல்லியில் 71வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திக்ரி, சிங்கு, காஜிப்பூர் உள்ளிட்ட எல்லைகளில் இந்த போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த போராட்டம் ஜனவரி 26-ம் தேதி கலவரமாக மாறியது. இதனால் டெல்லியில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டது. எனவே சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி, தற்காலிக சுவர்களைக் கட்டுவது, சாலைகளில் பெரிய ஆணிகளை பதிப்பது,  கான்செர்டினா கம்பி வேலிகளைப் பயன்படுத்தி தடையை ஏற்படுத்துவது என விவசாயிகளை தடுக்க பல வழிகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

விவசாயிகளின் போராட்டக்களமான சிங்கு (டெல்லி-அரியானா), காஜிப்பூர்(டெல்லி-உபி), திக்ரி ( டெல்லி-அரியானா) ஆகிய மூன்று இடங்களிலும் ஏற்கனவே ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில் தற்போது டெல்லிக்கு செல்லும் ஹரேவாலி, மங்கேஸ்புர், ஜரோடா, தன்சா, ஆகிய வழிகளிலும் தடுப்புகளை வைத்தது போலிசார் அடைத்துள்ளனர். இதனால் டெல்லிக்கு அண்டை மாநில விவசாயிகள் வருவதாக தடுக்க முடியும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

Related Stories: