என் தலைமையில் 3வது அணி அமையும்: சரத்குமார் பேச்சு

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சென்னை மேற்கு மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சென்னை வியாசர்பாடி எம்.கே.பி நகரில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று முன்தினம் மாலை அக்கட்சியின் தலைவர் சரத்குமார்  தலைமையில் நடைபெற்றது. இதில் சரத்குமார் மேடையில் பேசியதாவது, “1996ம் ஆண்டு திமுக ஆட்சி அமைக்க முக்கியக் காரணமாக இருந்தவன் நான். அப்போது கருணாநிதியிடம் நாம் 50 சீட்டு கொடுங்கள் என்று கேட்டு ஒரு இயக்கத்தை  ஆரம்பித்து இருந்திருந்தால் இன்று நான்தான் முதலமைச்சர். இதுவரை சமத்துவ மக்கள் கட்சி அதிமுக கூட்டணியில் தான் இருக்கிறோம். ஆனால் தேர்தலின்போது இரண்டு மூன்று சீட்டு கொடுக்கும் பட்சத்தில் நாம் தனித்து போட்டியிடும்  நிலமை வரும் அதற்கு நாம் அனைவரும் தயாராக இருக்க வேண்டும்.

இப்போ இல்லை என்றால் எப்போவுமே இல்லை என்ற ரஜினிகாந்தின் கருத்தை நான் பின்பற்றுகிறேன். மார்ச் மூன்றாம் தேதி நெல்லையில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. வரும் சட்டமன்ற தேர்தலில் மூன்றாவது அணி, நான்காவது அணி, 5வது அணி என அமைவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. கூட்டணியில் எங்களுக்கு ஒரு சீட்டு இரண்டு சீட்டு 3 சீட்டு என்று ஒதுக்கினால் நாங்கள் தேர்தலில் நிற்க மாட்டோம்.  மேலும் எங்களுக்கு எதிர்பார்த்த சீட்டு கிடைக்கவில்லை என்றால் எனது தலைமையில் மூன்றாவது அணி அமைவதற்கு கூட வாய்ப்புகள் உள்ளது என்றார்.

Related Stories: