ஜிலேபி

செய்முறை

Advertising
Advertising

மைதா மாவுடன் ஃபுட் கலர், பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா கலந்து தேவையான நீர் சேர்த்து 4 மணி நேரம் புளிக்க வைக்கவும். மாவு புளித்த பின் ஒரு கெட்சப் பாட்டிலிலோ ஊற்றியோ அல்லது  ஜிப் லாக் பேக்கில் ஊற்றியோ தயாராக வைக்கவும். ஒரு கப் நீர் சேர்க்கவும். சர்க்கரை, ஏலக்காய், பட்டை சேர்த்து கொதிக்க விடவும். ஒரு கம்பி பதம் வந்ததும் பன்னீர் சேர்க்கவும். எண்ணெய் காய்ந்ததும் ஜிலேபியாக பிழியவும். எண்ணெயின் சூடு, சிறிது மாவை விட்டதும் மேல் எழும்பி வரும் பதத்தில் இருக்கவேண்டும். அதிக சூடாக இருந்தாலோ, சூடு குறைவாக இருந்தாலோ ஜிலேபி ஜிலேபியாக வராது. இரண்டு பக்கமும் திருப்பி விட்டு நன்றாக சிவந்ததும் எடுத்து எண்ணெய் வடிய விட்டு சூடான சிரப்பில் போடவும். சிரப்பில் 5 நிமிடம் ஊறினால் போதும்.