கூட்டுறவு சங்கங்களுக்கு ரிசர்வ் வங்கியின் விதிமுறைகள் மக்களுக்கு எதிரானது: அமைச்சர் செல்லூர் ராஜூ குற்றச்சாட்டு

சென்னை: தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியில் தேர்வு எழுதியவர்களில் 175 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவ்வாறு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு கடந்த ஜனவரி 27ம் தேதி முதல் 5 நாள் பணி தொடர்பான புதுமுக பயிற்சி முகாம் நடைபெற்றது. நிறைவு நாளான நேற்று முன்தினம் பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி மாதவரம் பால் பண்ணையில் உள்ள விவசாய கூட்டுறவு பணியாளர் பயிற்சி நிலையத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், கூட்டுறவு வங்கி மாநில தலைவர் இளங்கோ தலைமை வகித்தார். கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர்  ராஜூ கலந்துகொண்டு அனைவருக்கும் சான்றிதழ்களை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியதாவது, “கூட்டுறவு சங்கங்களை பொறுத்தவரையில் 2011ல் நாடாளுமன்றத்தில் சட்ட விதியை உருவாக்கி இருக்கிறார்கள். ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் நடத்த வேண்டும். மக்கள் பிரதிநிதிகள் அதை ஆளவேண்டும் என்ற அடிப்படையில் நாடாளுமன்றத்தில் கொண்டுவந்து பாஸ் செய்தனர். அதன் அடிப்படையில் 2013ல் மறைந்த முதல்வர் ஜெயலலிதா தேர்தல் ஆணையம் அமைத்து தேர்தல் நடத்தினார்.  

அதேபோல், தற்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி 2018ல் தேர்தல் நடத்தி இரண்டாவது முறையாக மக்கள் பிரதிநிதி எல்லா சங்கங்களையும் ஆண்டு கொண்டிருக்கிறார். இதில் ஒரு சில ஷரத்துக்கள் மக்கள் விரோத சரத்துகள் உள்ளதா என்றால் இருக்கிறது. பொதுவாக ரிசர்வ் வங்கி உரிமையை பெற்று தான் எந்த வங்கியும் இயங்க முடியும். அதே நேரத்தில் அவர்கள் கொடுத்திருக்கிற சரத்துக்கள் சரியாக இல்லை தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களின் பதவிகள் ஏதோ அவர்களை நியமிப்பது போல் வருகிறது. இவ்வாறு தெரிவித்தார்.

Related Stories: