சிவகாசி புதுக்கோட்டையில் பயமுறுத்தும் பள்ளி சுவர் -அசம்பாவிதம் முன் சீரமைக்கப்படுமா?

சிவகாசி :  சிவகாசி அருகே புதுக்கோட்டையில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. தற்போது கொரோனாவால் பள்ளி இயங்கவில்லை. இப்பள்ளி கட்டிடம் கடந்த பல ஆண்டுகளாக சேதமடைந்து காணப்படுகிறது. சில வாரங்களுக்கு முன்பு பெய்த கனமழையால் பள்ளி சுவர் மேலும் சேதமடைந்து எப்போது வேண்டுமானாலும் விழும் நிலையில் ஆபத்தாக உள்ளது. பள்ளி இயங்காததால் வேறு அசம்பாவிதம் ஏற்படவில்லை.

இப்பள்ளி அருகே ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. பள்ளி கட்டிடம் அபாயம் தெரியாமல் இதனருகிலே சிறுவர்கள் விளையாடுகின்றனர். மேலும் கொரோனா முடிந்து பள்ளிகள் விரைவில் திறக்கப்படவுள்ளன. எனவே அசம்பாவிதம் ஏதும் நடக்கும் முன்பு புதுக்கோட்டை பள்ளி கட்டிடத்தை உடனே மராமத்து செய்ய வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து ஊராட்சி மன்ற தலைவர் காளீஸ்வரியிடம் கேட்டபோது, ‘பள்ளி கட்டிடத்தை ஊராட்சி நிதி ரூ.1.50 லட்சம் மதிப்பீட்டில் விரைவில் சீரமைக்க உள்ளோம்’ என்றார்.

Related Stories: