அவை நடவடிக்கைகளின் செல்போனில் பதிவிட்டு சமூக ஊடகங்களில் வெளியிடுவது வரம்பு மீறிய செயல்: வெங்கையா நாயுடு

டெல்லி: அவையில் செல்போனை பயன்படுத்த சில கட்டுப்பாடுகள் உள்ளது என மாநிலங்களவை கூட்டத்தில் அவைத் தலைவர் வெங்கையா நாயுடு பேசினார். சில உறுப்பினர்கள் அவை நடவடிக்கைகளை செல்போனில் பதிவு செய்வதை காணமுடிகிறது என கூறினார். அவை நடவடிக்கைகளின் பதிவை சமூக ஊடகங்களில் வெளியிடுவது வரம்பு மீறிய செயல் என எடுத்துரைத்தார். உறுப்பினர்களின் இந்த செயல் நாடாளுமன்ற அவமதிப்புக்கு வழிவகுக்கும் என கூறினார். எதிர்கட்சிகளின் கடும் அமளியால் நேற்று முழுவதும் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் இன்று மீண்டும் அவை தொடங்கியது. நாடாளுமன்ற நிலைக்குழுக்களின் அறிக்கைகள் இன்று தாக்கல் செய்யப்படுகின்றன. மாநிலங்களவையில் இன்று கேள்வி நேரமும், நாளை கேள்வி நேரம் மற்றும் பூஜ்ய நேரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

எதிர்கட்சியின் தொடர் அமளியால் நேற்று 3 முறை மாநிலங்களவை ஒத்தி வைக்கப்பட்டது. வேளாண் சட்டம் தொடர்பாக விவாதிக்க கோரி எதிர்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். மாநிலங்களவையில் தமிழக மீனவர்கள் பிரச்சனையை திமுக மற்றும் அதிமுக எம்பிக்கள் எழுப்பினர். தமிழக மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படை கொன்றுவிட்டதாக திமுக எம்பி சிவா குற்றசாட்டு கூறியுள்ளார். அடிக்கடி பாதிக்கப்படுவதால் மீன்பிடி தொழிலை விட்டு விட தமிழக மீனவர்கள் யோசிக்கின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: