இவிஎம் மிஷின் வாகனங்களை சிறைப்பிடிப்போம்... வாடகை வாகன டிரைவர்கள் எச்சரிக்கை

தமிழக சுதந்திர வாடகை வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜூட் மேத்யூ கூறியதாவது: ஓட்டுனர்கள் 12 மணிநேரத்திற்கு மேல் கூட பணியாற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. இதனால் அவர்களால் தங்களது ஜனநாயக கடமையான வாக்களிப்பதை நிறைவேற்றுவதில் சிரமத்தை சந்திக்கின்றனர். இதேபோல் இந்த வாகனங்களை இயக்கும் ஓட்டுனர்களின் வாக்கு உரிமையை உறுதி செய்ய, தேர்தல் ஆணையம் தவறி உள்ளது.

இதுதொடர்பாக சுதந்திர வாடகை வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் சங்கத்தின் சார்பாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிற்கு மின்னஞ்சல் வாயிலாக கோரிக்கை வழங்கப்பட்டது.

மேலும் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் தபால் வாக்கு அளிப்பது தொடர்பாக நேரில் சந்திக்க அனுமதி பெற்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில் தமிழக தேர்தல் அதிகாரி இது தொடர்பாக டெல்லியில் உள்ள மத்திய தேர்தல் ஆணையத்தின் செயலாளருக்கு எங்களது கோரிக்கை கடிதத்தை அனுப்பி வைத்தார். ஆனால் இதுவரை மாநில தேர்தல் ஆணையத்தில் இருந்தோ, மத்திய தேர்தல் ஆணையத்தில் இருந்தோ எவ்விதமான நடவடிக்கையும் இல்லை. இதனால் எங்களது கோரிக்கை கிடப்பில், கிடக்கும் ஜனநாயக உரிமையாக மாறியுள்ளது. தமிழக ஓட்டுனர்களுக்கு தபால் வாக்கினை 2021 சட்டமன்றத் தேர்தலில் அறிமுகப்படுத்தா விட்டால் தேர்தல் பணிக்காக ‘இவிஎம்’ மிஷின் எடுத்து செல்லும் வாகனங்களை சிறைபிடிக்க திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: