நாசா செயல் தலைவராக இந்திய விஞ்ஞானி நியமனம்

வாஷிங்டன்: அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையான நாசாவின் பணியாளர் குழு செயல் தலைவராக இந்திய-அமெரிக்க விஞ்ஞானி பாவ்யா லால் நியமிக்கப்பட்டுள்ளார். அதிபர் பைடன் ஆட்சி நிர்வாகத்தில் இந்திய வம்சாவளியினருக்கு பல்வேறு முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தற்போது நாசாவின் பணியாளர் குழு செயல் தலைவராக இந்திய வம்சாவளி பாவ்யா லால் நியமிக்கப்பட்டுள்ளார்.

பொறியியல் மற்றும் விண்வெளி தொழில்நுட்பத்தில் மிகுந்த அனுபவம் பெற்ற பாவ்யா, 2005ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரை அமெரிக்காவின் ராணுவ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் ஆராய்ச்சியாளராக பணியாற்றி வந்தார். மேலும், வெள்ளை மாளிகையின் விண்வெளி தொழில்நுட்ப குழு, யுக்தி, கொள்கை வகுக்கும் குழு தலைவராகவும், தேசிய விண்வெளி கவுன்சில் உறுப்பினராகவும் பொறுப்பு வகித்தவர்.

Related Stories: