ஸ்ரீராம் வார்டில் சுத்திகரிப்பு குடிநீர் மையம் திறப்பு

தங்கவயல்: தங்கவயல் நகரசபை சார்பில் உரிகம் பேட்டை ஸ்ரீராம் நகர் மற்றும் சோமேஸ்வரா வார்டுகளில் சுத்திகரிப்பு குடிநீர் மையம் திறந்து வைக்கப்பட்டது. தங்கவயல் முழுவதும் பொது மக்களுக்கு சுகாதாரமான குடிநீர் வழங்க வேண்டும்  என்ற நோக்கில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையங்கள் கட்டப்பட்டன. வார்டுக்கு ஒரு மையம் என கட்டப்பட்ட இந்த மையங்கள் குடிநீர் இணைப்பு இன்றி பல வருடங்களாக பூட்டி கிடந்தன. பொது மக்களுக்கு இந்த சுத்திகரிப்பு குடிநீர் மையங்கள்  எப்போது பலன் தரும் என்று பொதுமக்கள் காத்திருந்தனர். இந்த நிலையில், உரிகம் பேட்டையில் இரண்டு சுத்திகரிப்பு குடிநீர் மையங்களை நகரசபை தலைவர் வள்ளல் முனிசாமி திறந்து வைத்து பேசும் போது, இந்த குடிநீர் மையங்களை  பராமரிக்கும் பொறுப்பு தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்க பட்டுள்ளது. பொதுமக்களுக்கு 5 க்கு ஒரு கேன் குடி நீர் வழங்கப்படும். அதற்கான ரீசார்ஜ் அட்டைகள் வழங்கப்படுகிறது. பொது மக்கள் தேவைக்கு ஏற்ப அதை ரீசார்ஜ் செய்து கொண்டு  பயனடையலாம் என்றார். நிகழ்ச்சியில் பகுதி கவுன்சிலர்கள், குடிநீர் வாரிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: