அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணிக்காக டெல்லி பாஜ நன்கொடை வசூல்: ஆதேஷ்குப்தா தொடங்கினார்

புதுடெல்லி: அயோத்தியில் கட்டப்பட உள்ள ராமர் கோயிலுக்கு பொதுமக்களிடம் நிதி திரட்டும் பிரசாரத்தை டெல்லி பாஜ கட்சி தலைவர் ஆதேஷ் குப்தா நேற்று தொடங்கினார். பாஜ கட்சியின் டெல்லி பிரிவு முன்னாள் தலைவரும்  தற்போதைய எம்பியுமான மனோஜ் திவாரி, ராமர் கோயில் கட்டுவற்காக மக்களிடம் நிதி திரட்டும் ரத யாத்திரையை வடகிழக்கு டெல்லி பகுதியில் தொடங்குவதாக அறிவித்து இருந்தார். ஆனால், விவசாயிகளின் போராட்டம் மற்றும்  டெல்லியில் இஸ்ரேல் தூதரகம் அருகே  நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவம் போன்ற காரணங்களை மேற்கோள்காட்டி தனது ரதயாத்திரை நிகழ்ச்சியை தற்காலிகமாக ஒத்தி வைப்பதாக அறிவித்து இருந்தார். இயல்பான சூழல் திரும்பியவுடன்  ரதயாத்திரை நடத்தப்படும் என்றும் அறிவித்தார். இந்நிலையில், மனோஜ் திவாரி ரதயாத்திரை நிகழ்ச்சியை ரத்து செய்தாலும், டெல்லி பிரிவு பாஜ கட்சி நேற்று நிதி திரட்டும் பணியை தொடங்கியது.

டெல்லி பிரிவு பாஜ தலைவர் அதேஷ் குப்தா இதற்கான பணியை வாசிர்பூரின் ஜேஜே காலனி பகுதியில் உள்ள வால்மீகி கோயிலிலிருந்து நிதிதிரட்டும் பணியை தொடங்கினார். இதையடுத்து டெல்லி நகரம் முழுவதும் பாஜ தொண்டர்கள்  அயோத்தி கோயில் கட்டும் பணிக்காக நிதி திரட்டினர். மனோஜ் திவாரியும் தனது தொகுதிக்குட்பட்ட பகுதிகளுக்கு சென்று நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டார்.

* மனோஜ் திவாரி ரதயாத்திரை நடத்த திட்டமிட்ட வடகிழக்கு டெல்லி பகுதியில் தான் கடந்த ஆண்டு பிப்ரவரியில் வகுப்புவாத கலவரம் ஏற்பட்டது.

* இதில் 53 பேர் வரை கொல்லப்பட்டனர். 300க்கும் அதிகமானோர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: