பெங்களூருவில் சர்வதேச விமான கண்காட்சி: மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் நாளை தொடங்கி வைக்கிறார்.!!!

பெங்களூரு: பெங்களூருவில் மூன்று நாட்கள் நடைபெறவுள்ள சர்வதேச விமான கண்காட்சியை மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் நாளை தொடங்கி வைக்கிறார். பெங்களூருவில் இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை சர்வதேச  விமான கண்காட்சி நடத்தப்படுகிறது. இதை காண இந்தியா மட்டுமில்லாமல், உலகின் பல நாடுகளில் இருந்தும் பார்வையாளர்கள் வருவார்கள். அதன்படி இவ்வாண்டிற்கான 13வது சர்வதேச விமான கண்காட்சி நாளை தொடங்கி 5ம் தேதி வரை  மூன்று நாட்கள் நடக்கிறது.

இதற்கான ஏற்பாடுகள் பெங்களூரு எலகங்காவில் உள்ள விமானப்படை பயிற்சி மைதானத்தில் செய்யப்பட்டுள்ளது. விமான கண்காட்சியில் இந்திய விமான படைக்கு சொந்த சாரங்க் ஹெலிகாப்டர்கள், சூரியகிரண் விமானங்கள், டகோடா,  சுகோய், ரபேல், எல்சிஎச், எல்யூஎச், ஜாக்வர், ஹாக், பைட்டர் ஜெட், ஏர்கிராப்ட் ஹெலிகாப்டர்கள் சாகசம் செய்கிறது. இந்தியா உள்பட பல நாடுகளை சேர்ந்த 63 விமானங்கள் சாகசங்கள் செய்கின்றன. இதில் 42 விமானங்கள் தினமும் இருமுறை  சாகசத்தில் ஈடுபடுகிறது. இவ்வாண்டு விமான கண்காட்சியை நாளை காலை 9 மணிக்கு மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் தொடங்கி வைக்கிறார்.

48,000 கோடி ஒப்பந்தம்:

கடந்த ஜனவரி 13ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாதுகாப்பு அமைச்சரவை குழு (சிசிஎஸ்) இந்திய விமானப்படையின் போர் வலிமையை உயர்த்துவதற்காக 73 தேஜஸ் எம்.கே -1 ஏ வேரியண்ட்கள் மற்றும் 10 எல்.சி.ஏ தேஜாஸ்   எம்.கே -1 பயிற்சி விமானங்களை எச்.ஏ.எல் நிறுவனத்தில் இருந்து வாங்க ரூ.48,000 கோடி ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்தது. இதை செயல்படுத்தும் வகையில் எலகங்கா விமானப்படை மைதானத்தில் நடைபெற்ற விழாவில் மத்திய பாதுகாப்பு  துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், 48,000 கோடி ஒப்பந்தத்தின் கீழ் தேஜாஸ் எல்.சி.ஏவை இந்திய விமானப்படைக்கு வழங்குவது தொடர்பான பணியை தொடங்கி வைத்தார்.

Related Stories: