அதிமுக கூட்டணியில் தான் நீடிக்கிறோம்: கூடுதல் சீட் கேட்டு தனி சின்னத்தில் போட்டி...சரத்குமார் பேட்டி

கோவை: ‘‘அதிமுக கூட்டணியில் தான் நீடிப்பதாகவும், கூடுதல் சீட் கேட்டு தனி சின்னத்தில் தேர்தலில் போட்டியிடுவோம்,’’ என சமக தலைவர் சரத்குமார் தெரிவித்தார்.கோவையில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் கொங்கு மண்டல நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் செல்வபுரம் பகுதியில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் கட்சியின் தலைவர் சரத்குமார், ராதிகா சரத்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் சரத்குமார் நிருபர்களிடம் கூறியதாவது: அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தற்போதுவரை அ.தி.மு.க. கூட்டணியில்தான் உள்ளது. அதே நேரத்தில் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை இன்னும் தொடங்கப்படவில்லை. அ.தி.மு.க. உடனான கூட்டணி பேச்சுவார்த்தை முடிவடைந்த பிறகுதான் எத்தனை தொகுதிகளில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி போட்டியிடுவது என தெரியும்.

அ.தி.மு.க., கூட்டணியில் ஒன்று அல்லது 2 இடங்கள் என சுருக்கிக்கொள்ளாமல் கூடுதலாக இடங்களை கேட்டு பெற்று, தனி சின்னத்தில் வருகிற சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவோம். ராதிகா சரத்குமார் இந்த தேர்தலில் நிச்சயமாக போட்டியிடுவார். தேர்தல் நடைபெறும் மாநிலங்களுக்கு பட்ஜெட்டில் அதிக நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. இந்த பட்ஜெட் பயனளிக்குமா? என்பதற்கு காலம்தான் பதில் அளிக்கும். இவ்வாறு சரத்குமார் கூறினார்.

Related Stories: