2 முதல்வர்களை தந்த தொகுதி ஆண்டிபட்டியில் போட்டியிட அதிமுக தயக்கம்

ஆண்டிபட்டி: தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தொகுதி 2 முதல்வர்களை தந்த தொகுதி. இந்த தொகுதி அதிமுகவின் முக்கிய தொகுதியாக இருந்து வந்தது.  எம்ஜிஆர், ஜெயலலிதா என 2  தலைவர்களை முதல்வர்களாக்கிய தொகுதி. கடந்த சட்டமன்ற இடைத்தேர்தலில் பெற்ற வெற்றி மூலம், ஆண்டிபட்டியை அதிமுகவிடம் இருந்து திமுக தட்டிப்பறித்தது.   ஏராளமான கிராமங்கள் உள்ள இத்தொகுதியில் விவசாயம் பிரதான தொழில். ஆனால் பாசனத்திற்கு போதுமான தண்ணீர் கிடைக்காமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.

தண்ணீர் பிரச்னையை கையில் எடுத்து, திமுக போராடி வருகிறது. ஆனால் அதிமுகவினர் இந்த பிரச்னையை கண்டுகொள்ளவே இல்லை.

இதனால் தொகுதி முழுவதும் திமுகவுக்கு ஆதரவான மனநிலையே காணப்படுகிறது. இதனால் அதிமுக நிர்வாகிகள் திகைப்பில் உள்ளனர். கொரோனா ஊராடங்கில் ‘ஒன்றிணைவோம் வா’ என்ற திட்டத்தின் மூலம் ஆராம்பித்து தற்போது மக்கள் கிராமசபை கூட்டம் வரை தொடர்ந்து மக்களுக்கு உதவிகளையும், குறைகளையும் கேட்டறிந்து திமுகவினர் செயல்பட்டு வருகின்றனர்.

 அதிமுக கட்சியினரால் மக்களுக்கு எந்தஒரு பலனும் இல்லை. இதனால் ஆண்டிபட்டி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட நிர்வாகிகள் தயக்கம் காட்டி வருகின்றனர். அதிமுகவினர் மாவட்டத்தில் பல இடங்களில் தேர்தல் பணியை துவக்கி விட்ட போதிலும், ஆண்டிபட்டி தொகுதியில் தேர்தல் பணி சிறிதளவு கூட துவக்கப்படவில்லை. இதனால் அதிமுக தொண்டர்களும் சோர்வடைந்துள்ள னர்.

Related Stories: