தென்மாவட்டங்களில் தொடரும் போலீசார் கொலைகள்: ரவுடிகள் ஒடுக்கப்படுவார்களா?

நெல்லை: தென் மாவட்டங்களில் போலீசார் படுகொலை செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதால் ரவுடிகளை கட்டுப்படுத்த கடும்  நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.கடந்த 2012ம் ஆண்டு நெல்லை மாவட்டம், திசையன்விளையை சேர்ந்த எஸ்ஐ ஆல்வின் சுதன் என்பவர் மானாமதுரையில் 3 ரவுடிகளால் கத்தியால்  குத்திக் கொலை செய்யப்பட்டார். கடந்த 2010 ஏப்ரல் மாதம் விருதுநகர், சாத்தூர் அருகிலுள்ள ஒ.மேட்டுப்பட்டி காளியம்மன் கோவில் திருவிழா  பாதுகாப்பு பணிக்கு, தாலுகா போலீஸ்காரர் நாகரத்தினம்(38), சக போலீஸ்காரர் ஒருவருடன் சென்றிருந்தார். அதே ஊரைச் சேர்ந்த ரவுடி குமார்  என்பவரை ஒரு வழக்கு தொடர்பாக போலீசார் தேடி வந்தனர். இதனால் போலீசார் மீது ஆத்திரமடைந்த குமார் குடிபோதையில், நாகரத்தினத்தை  வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பி ஓடினார். போலீசார் அவரை என்கவுன்டர் செய்தனர்.

நெல்லை மாவட்டம் தேவர்குளம் அருகேயுள்ள மூவிருந்தாளி சாலைப்புதூரை சேர்ந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் சென்னை  மதுரவாயல் இன்ஸ்ெபக்டராக பணியாற்றிய போது கடந்த 2017ம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலத்தில் மிகவும் ெகாடூரமான பவாரியார் கொள்ளையர்கள்  தேடுதல் வேட்டையின் போது துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். கடந்த 2018ம் ஆண்டு நெல்லை மாவட்டம், விஜயநாராயணம் காவல் நிலையத்தை சேர்ந்த தனிப்பிரிவு காவலர் ஜெகதீஷ்துரை மணல் கொள்ளையை  தடுக்கச் சென்ற போது நள்ளிரவில் மணல் ெகாள்ளையர்களால் லாரி ஏற்றிக் கொலை செய்யப்பட்டார்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு அருகே மணக்கரை மலைப்பகுதியில் பதுங்கியிருந்த பல கொலை வழக்குகளில்  தேடப்பட்ட துரைமுத்து என்பவரை பிடிக்கச் சென்ற ஆழ்வார்திருநகரி போலீஸ் நிலைய காவலர் சுப்பிரமணியன் என்பவர் வெடிகுண்டு வீசி கொலை  செய்யப்பட்டார். தற்போது ஏரல் எஸ்ஐ பாலு லோடு ஆட்டோவால் மோதி கொலை செய்யப்பட்டுள்ளார். இது போன்று போலீசார் மீதான கொலைகள்,  தாக்குதல்கள் தென்மாவட்டத்தில் அதிகரித்து வருகிறது. எனவே ரவுடிகளை போலீசார் ஒடுக்க வேண்டும் என்ற கோரிக்கை பொதுமக்கள் மற்றும்  சமூக ஆர்வலர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Related Stories: