மேலமைக்கேல்பட்டியில் குடிநீர் கேட்டு காலி குடத்துடன் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பெண்கள் முற்றுகை

தா.பழூர்: அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள மேலமைக்கேல்பட்டி கிராமத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இப்பகுதி  பொதுமக்களுக்கு போர்வெல் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வந்தது.கடந்த ஓராண்டுக்கு முன் குடிநீருக்கான போர்வெல் பழுதானது.இந்த போர்வெல் பழுதை சரி செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் பலனில்லை.இந்நிலையில் நேற்று காலை தா.பழூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை நோக்கி மேல மைக்கேல் பட்டி கிராம பெண்கள் காலி குடங்களுடன்  ஊர்வலமாக சென்று, ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிடனர்.

குடிநீர் பிரச்னையை சரி செய்ய வேண்டும் என்று முழக்கமிட்டனர். தகவலறிந்த  காவல்துறையினர் விரைந்து வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.இதனை தொடர்ந்து வட்டார வளர்ச்சி அலுவலர் தேவி முன்னிலையில்  கிராம முக்கிய பிரமுகர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் குடிநீர் பிரச்னை சரி செய்யப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது.  இதையடுத்து காலி குடங்களுடன் வந்த பொதுமக்கள் கலைந்து சென்றனர். காலி குடங்களுடன் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள்  முற்றுகையிட முயன்றதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: