இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 25ம் தேதி தேசிய வாக்காளர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அன்றைய தினத்தில் தேர்தல் ஆணையம் புதுமைகளை புகுத்தி வருகிறது. அதன்படி, இந்த ஆண்டிற்கான தேசிய வாக்காளர் தின விழா கடந்த 25ம் தேதி கொண்டாடப்பட்டது. அதில், e-EPIC என்ற புதிய சேவையை வழங்கியுள்ளது. வாக்காளர்கள் தங்களது அடையாள அட்டையை அவர்களது செல்போன் மற்றும் கணினியில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.இந்த வாக்காளர் அடையாள அட்டை அனைத்து இடங்களிலும் செல்லத்தக்கதாகும். பதிவிறக்கம் செய்து அச்சிட்டு கொள்ளலாம். க்யூஆர் கோட் மூலம் வாக்காளர் பட்டியல் வரிசை எண், பாகம் எண் மற்றும் தேர்தல் தொடர்பான இதர தகவல்களை பெறலாம். , , Voter Helpline கைபேசி செயலி மூலமாக பதிவிறக்கம் செய்யலாம். இணைய முகவரி பதிவு செய்தல், வாக்காளர் அடையாள அட்டை எண்/ பதிவு எண் குறிப்பிடவும், ஓடிபி எண் பதிவிடவும். பின்னர் அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்யலாம்.