புதுச்சேரிக்கு 15வது சட்டப்பேரவை தேர்தல்

புதுச்சேரி மாநிலம் புதுச்சேரி, காரைக்கால், மானே, ஏனாம் ஆகிய 4 பிராந்தியங்களை கொண்டுள்ளது. புதுச்சேரி, காரைக்கால் பகுதிகள் தமிழ்நாட்டிலும், மாகே கேரளாவிலும், ஏனாம் ஆந்திராவிலும் அமைந்துள்ளன. புதுச்சேரி பகுதியின் இடையிடையே கடலூர், விழுப்புரம் மாவட்ட பகுதிகளும் அமைந்துள்ளன. 30 சட்டசபை தொகுதிகளை கொண்டுள்ள புதுச்சேரி மாநிலம் ( புதுச்சேரி-23. காரைக்கால்-5, மாகே-1, ஏனாம்-1 ) மக்களவை உறுப்பினர் ஒன்றும், மாநிலங்களவை உறுப்பினர் ஒன்றையும் பெற்றுள்ளன. 1963 முதல் இதுவரை பதினான்கு சட்டப்பேரவையை கண்டுள்ள புதுச்சேரி மாநிலம் நடைபெறவுள்ள 2021 சட்டமன்ற பொதுத்தேர்தலின்போது 15வது சட்டபேரவைக்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க உள்ளது. இதுவரை மொத்தம் 10.03 லட்சம் பேர் இத்தேர்தலில் வாக்களிக்க தகுதியானவர்களாக மாநில தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளனர். தேர்தல் தேதி அறிவிப்பை புதுச்சேரி மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Related Stories: