விவசாயத்தை நவீனமயமாக்கி மேம்படுத்த வேண்டும் என்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது: மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரை

டெல்லி: விவசாயத்தை நவீனமயமாக்கி மேம்படுத்த வேண்டும் என்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். கடந்த 2014ம்  ஆண்டு முதல் முறையாக பிரதமராக பதவியேற்ற பின்னர் பொதுமக்களுடன்  உரையாற்றும் வகையில் ‘மன் கி பாத்’ என்ற நிகழ்ச்சியை பிரதமர் மோடி  தொடங்கினார். இந்தியாவின் பெரும்பான்மையாக மக்களிடம் இந்த நிகழ்ச்சியை கொண்டு செல்லும் வகையில், வானொலி வாயிலாக ஒளிபரப்ப முடிவு செய்யப்பட்டது. தொடர்ந்து, அகில இந்திய வானொலி மூலமாக முதல் முறையாக 2014 விஜயதசமியன்று (அக்டோபர் 03) தனது முதல் உரையை பிரதமர் மோடி தொடங்கினார்.

2019 நாடாளுமன்ற தேர்தலில் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதையடுத்து, மீண்டும் பிரதமராக பொறுப்பேற்ற பிரதமர் மோடி, மன் கி பாத் நிகழ்ச்சியை 2019 ஜூன் 30-ம் தேதி மீண்டும் தொடங்கினார். மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை மன் கி பாத் நிகழ்ச்சி மூலம் மக்களிடம் உரையாற்றி வருகிறார். அந்த வகையில், இன்று ஜனவரி மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை என்பதால் இன்று காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலியில் உரையாற்றுகிறார். அப்போது பேசிய அவர்; வன்முறை எந்த ஒரு பிரச்சனைக்கும் தீர்வாகாது. ஜன.26-ல் நமது மூவர்ணக் கொடி அவமதிக்கப்பட்டது நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

வேளாண்துறையை நவீனமாக்க அரசு எடுத்து வரும் பல்வேறு முயற்சிகள் தொடரும். கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் தடுப்பூசிகள் மூலம் புதிய நம்பிக்கை பிறந்துள்ளது. பிற நாடுகளை விட இந்தியாவில் கொரோனா தடுப்பூசி விரைவாக அளிக்கப்பட்டு வருகிறது. ஹைதராபாத்தில் குப்பையில் வீசப்படும் காய்கறிகள் மூலம் மின்சாரம் தயாரிக்கப்படுவதற்கு வாழ்த்துக்கள். 2021-ம் ஆண்டை சிறப்பான ஆண்டாக உருவாக்க மக்கள் தங்கள் பங்களிப்பை அளிக்க வேண்டும். நாட்டுக்காக தியாகம் செய்த மாவீரர்களுக்கு இந்தியா வீரவணக்கத்தை செலுத்துகிறது.

இளம் எழுத்தாளர்களை ஊக்கப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. கனடாவில் இருந்து இந்தியாவுக்கு விமானத்தை இயக்கிய பெண் விமானிக்கு பாராட்டுக்கள். கிராமப் பெண்கள் தன்முனைப்பும், லாபம் ஈட்டுவோராகவும், சாதனை படைப்பாவார்களாகவும், திகழ்கின்றனர். விவசாயத்தை நவீனமயமாக்கி மேம்படுத்த வேண்டும் என்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது என கூறினார்.

Related Stories: