ஜெயலலிதா நினைவிட திறப்பு விழாவுக்கு வந்த மேலும் ஒரு அதிமுக தொண்டர் மரணம்: குடும்பத்துக்கு கட்சி சார்பில் 3 லட்சம்

சென்னை: ஜெயலலிதா நினைவிட திறப்பு விழாவுக்கு வந்த மேலும் ஒரு அதிமுக தொண்டர் மரணம் அடைந்தார். அவரது குடும்பத்துக்கு கட்சி சார்பில் 3 லட்சம் வழங்கப்படும் என்று இபிஎஸ், ஓபிஎஸ் அறிவித்துள்ளனர். இதுகுறித்து, அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம்,  இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நேற்று  வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னை மெரினா கடற்கரையில் கடந்த 27ம் தேதி ஜெயலலிதா நினைவிட திறப்பு விழா நிகழ்ச்சி நடந்தது. இதில் கலந்துகொள்வதற்காக வந்திருந்த தஞ்சாவூர் வடக்கு மாவட்டம் பாபநாசம் மேற்கு ஒன்றியம், உம்பளாபாடி ஊராட்சி ஆதிதிராவிடர் மேட்டு தெருவை சேர்ந்த அதிமுகவின் தீவிர விசுவாசி என்.சண்முகம் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்துவிட்டார்.

அவரை இழந்து வாழும் குடும்பத்தினருக்கு ஆழந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன், அவரது குடும்பத்திற்கு அதிமுக சார்பில் குடும்ப நல உதவியாக 3 லட்சம் வழங்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர். ஏற்கனவே இரண்டு பேர் மரணம் அடைந்ததும், அவர்களுக்கு கட்சி சார்பில் 3 லட்சம் வழங்கியதும் குறிப்பிடத்தக்கது.

Related Stories: