உலகின் மிகப்பெரிய சந்தை என்பதற்கு மாறாக மிகப்பெரிய ஆயுத உற்பத்தி நாடாக இந்தியா மாறும்: பிரதமர் மோடி உறுதி

புதுடெல்லி: குடியரசு தின அணிவகுப்பில் கலந்து கொண்ட தேசிய மாணவர் படையினர் (என்சிசி), டெல்லியில் உள்ள கரியப்பா மைதானத்தில் நேற்று நடந்த பேரணியில் கலந்து கொண்டனர். அவர்களிடையே பிரதமர் மோடி பேசியதாவது: கொரோனா நோய் தொற்றுக்கு எதிரான தடுப்பு மருந்து தயாரிப்பிலும், எதிரி நாடுகளில் ஏவுகணைகளை மறித்து அழிப்பது என எந்த சவாலாக இருந்தாலும், அதனை எதிர்கொள்வதற்கான அனைத்து திறன்களும் இருப்பதை இந்தியா கடந்த ஆண்டு நிரூபித்துள்ளது. இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகின்றது.  கொரோனா தடுப்பு மருந்தில் ஆத்மநிர்பார் எனப்படும் சுயசார்பு கொள்கை பின்பற்றப்பட்டது போலவே, ஆயுத படையின் ஒவ்வொரு பிரிவும் சிறந்தவை என்பதை உறுதி செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு–்ளது.

தற்போது, நாட்டில் சிறந்த போர் இயந்திரங்கள் இருக்கின்றன. ரபேல் போர் விமானங்கள் இந்தியா வரும் வழியில் இடையில் எரிபொருள் நிரப்பின. இதற்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவுதி அரேபியா, கிரீஸ் போன்ற நாடுகள் உதவி செய்தன.  வளைகுடா நாடுகள் உடனான இந்தியாவின் உறவை இது பிரதிபலிக்கிறது. உலகின் மிகப்பெரிய சந்தையாக தற்போது அறியப்பட்டு வரும் இந்தியா, விரைவில் மிகப்பெரிய பாதுகாப்பு ஆயுதங்கள், தளவாடங்கள் உற்பத்தி மையமாக மாறும். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: