பிரசித்தி பெற்ற புளியம்பட்டி புனித அந்தோணியார் ஆலய பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவக்கம்-பிப்ரவரி 8ல் புனிதரின் தேர்பவனி

ஓட்டப்பிடாரம் : புளியம்பட்டியில் பிரசித்தி பெற்ற புனித அந்தோணியார் திருத்தலப் பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்குகிறது. முக்கிய விழாவான புனிதரின் தேர்பவனி அடுத்த மாதம் 8ம்தேதி  நடக்கிறது.பாளையங்கோட்டை மறை மாவட்டத்துக்கு உட்பட்ட புளியம்பட்டி புனித அந்தோணியார் திருத்தலப் பெருவிழா இன்று துவங்குகிறது. இதையொட்டி மாலை 5.30 மணிக்கு பாளை மறைமாவட்ட முன்னாள் ஆயர் ஜூடு பால்ராஜ் தலைமையில் ஜெபமாலையுடன் 6 மணிக்கு திருவிழா கொடியேற்றம் நடக்கிறது. தொடர்ந்து திருப்பலி நிகழ்ச்சி  நடக்கிறது.

பிப்.2ம் தேதி மாலை 5.45 மணிக்கு பாளையங்கோட்டை உதவி பங்குத்தந்தை மைக்கேல் பிரகாசம் தலைமையில் கெபியிலிருந்து மெழுகுவர்த்தி பவனி  நடக்கிறது. 8ம்தேதி காலை 6 மணிக்கு திண்டுக்கல் மறை மாவட்டம் ஆர்சி நகர் பங்குத்தந்தை மரிய இஞ்ஞாசி, பூண்டி மாதா திருத்தலம் துணை அதிபர் அல்போன்ஸ், குழித்துறை மறை மாவட்டம் மேல்பாலை பங்குத்தந்தை ஐசக், தூத்துக்குடி மறை மாவட்டம் கொம்பாடி பங்குத்தந்தை லாசர் தலைமையில் திருப்பலி நடக்கிறது.

மாலை 6 மணிக்கு பாளை மறைமாவட்ட முதன்மை குரு குழந்தைராஜ், பாளை கத்தோலிக்க ஆயர் இல்லம் சகாயஜான் ஆகியோர் தலைமையில் திருப்பலியும், முக்கிய நிகழ்வாக இரவு  8.30 மணிக்கு தேர் சப்பரப் பவனியும் நடக்கிறது.

9ம் தேதி அதிகாலை 4.30 மணிக்கு காமநாயக்கன்பட்டி உதவி பங்குத்தந்தை லூர்து மரியசுதன், 6 மணிக்கு பண்டாரக்குளம் பங்குத்தந்தை அருள் அந்தோணி மைக்கேல், 7.30 மணிக்கு கோவில்பட்டி பங்குத்தந்தை அலாய்சிஸ் துரைராஜ் தலைமையில் திருப்பலி நிகழ்ச்சிகள் நடக்கிறது. காலை 11.30 மணிக்கு பாளை மறைமாவட்ட ஆயர் அந்தோணிசாமி தலைமையில் ஆண்டுப் பெருவிழா திருப்பலி நடக்கிறது. மாலை 6 மணிக்கு சேர்ந்தமரம் பங்குத்தந்தை இம்மானுவேல் ஜெகன்ராஜா தலைமையில் திருப்பலி, நற்கருணை ஆசீர் நடக்கிறது.

10ம் தேதி அதிகாலை 4.30 மணிக்கு அலவந்தான்குளம் பங்குத்தந்தை அந்தோணி வியாகப்பன் தலைமையில் நன்றி திருப்பலியும், மாலை 6 மணிக்கு கொடியிறக்கமும் நடக்கிறது. விழா நாட்களில் தினமும் காலை, மாலை திருப்பலியும், நற்கருணை ஆசீரும் நடக்கிறது.

ஏற்பாடுகளை புளியம்பட்டி புனித அந்தோணியார் திருத்தல பங்குத்தந்தை மரியபிரான்சிஸ், ஆன்மீக தந்தை சகாயதாசன், உதவி பங்குத்தந்தை அல்போன்ஸ் பவுல்ராஜ், அருட்சகோதரிகள் உள்ளிட்ட திருத்தல மக்கள் செய்து வருகின்றனர்.

Related Stories: