நாளை மாலை 4.30 மணிக்கு கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்..! முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை

சென்னை: முதல்வர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நாளை மாலை 4.30 மணிக்கு நடக்கிறது.  பிப்ரவரி 2 ம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில் அமைச்சர்களுடன் முதல்வர் ஆலோசனை நடத்துகிறார். 2021-ம் ஆண்டுக்கான தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் பிப்ரவரி 2-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஆளுநர் உரையுடன் இந்தக் கூட்டத்தொடர் தொடங்குகிறது. வழக்கமாக ஜனவரி 2-ம் வாரத்தில் நடைபெறுவது வழக்கம், இந்தாண்டு பிப்ரவரி வரை தள்ளிச்சென்றிருக்கிறது.

முக்கிய அறிவிப்புகள் முக்கிய அறிவிப்புகள் வரும் மே மாதம் 24-ம் தேதியுடன் சட்டசபை முடிவுக்கு வரவுள்ளதால் ஆளுநர் உரை மற்றும் அதற்கு பிறகு நடைபெறும் இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடரின் போது ஏராளமான சலுகைகளும், அறிவிப்புகளும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்த இரண்டு கூட்டத்தொடர்களும் மிகுந்த எதிர்பார்ப்புடன் கூடியதாக இருக்கிறது. ஜெயலலிதா நினைவு இல்ல விவகாரம், சசிகலா விடுதலை, கூட்டணி, எதிர்க்கட்சிகளின் தொடர் குற்றச்சாட்டு என்று ஏகப்பட்ட நெருக்கடியான நிலையில் நாளை அமைச்சரவை கூடுவதால் பரபரப்பு எழுந்திருக்கிறது.

Related Stories: