நகை வியாபாரி வீட்டில் 2 பேரை கொலை செய்து 16 கிலோ தங்க நகைகள் கொள்ளை: சீர்காழியில் பரபரப்பு

சீர்காழி: சீர்காழியில் நகை வியாபாரி வீட்டில் 2 பேரை கொன்று 16 கிலோ தங்க நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளன. ரயில்வே ரோட்டில் உள்ள வீட்டில் நுழைந்து கொடூரமாக வியாபாரி குடும்பத்தை கொள்ளையர்கள் தாக்கியுள்ளனர். தாக்குதலில் நகை வியாபாரி தன்ராஜின் மனைவி ஆஷா, மகன் அகில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் ரயில்வே ரோட்டில் குடும்பத்துடன் வசித்து வருபவர் தன்ராஜ்.

இவருக்கு ஆஷா என்ற மனைவியும் அகில் என்ற மகனும் உள்ளனர். அகிலுக்கு திருமணமாகி நிக்கில் என்ற மனைவி இருந்துள்ளார். தன்ராஜ் நகை வியாபாரம் செய்யும் தொழிலில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் நகை வியாபாரி தன்ராஜ் வீட்டில் நுழைந்த கொள்ளையர்கள் வீட்டில் இருந்தவர்களை கொடூரமாக தாக்கி 16 கிலோ நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர். வீட்டுக்குள் நுழைந்த வடமாநில கொள்ளையர்கள் வீட்டில் இருந்தவர்களை கொடூரமாக தாக்கியுள்ளனர்.

தாக்குதலில் நகை வியாபாரி தன்ராஜின் மனைவி ஆஷா மற்றும் மகன் அகில் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். அத்துடன் இந்த தாக்குதலில் தன்ராஜ் மற்றும் மருமகள் நிக்கில் படுகாயமடைந்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சீர்காழி போலீசார் சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அத்துடன் அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories:

>