சாத்தூர் அருகே அடிப்படை வசதிக்கு ஏங்கும் அம்மாபட்டி

சாத்தூர் : சாத்தூர் அருகே அம்மாபட்டி கிராமத்தில் அடிப்படை வசதியின்றி  கிராமமக்கள் தவித்து வருகின்றனர்.

சாத்தூர் அருகே குமரரெட்டியாபுரம், ரூக்குமுன்ஜி, ராமலிங்காபுரம் காலனி, அம்மாபட்டி காலனி, அம்மாபட்டி கிராமம் ஆகிய ஐந்து பகுதிகளை உள்ளடக்கியது. அம்மாபட்டி பஞ்சாயத்து இக்கிராமத்தில் பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் முறையாக குடிநீர் வழங்குவதில்லை. அத்துடன் தெருக்களில் சாலை, வாறுகால் வசதியும் இல்லை.

பொது சுகாதாரவளாகம், மயானத்திற்கு செல்ல சாலையில் புதர் மண்டிக்கிடப்பதுடன், சாலை வசதியில்லை என்று கிராமமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.மேலும் கிராமத்தின் மத்தியில் சுற்றுச்சுவர் இல்லாமல் அபாயகரமாக பொதுக்கிணறு உள்ளதாகவும், அதற்கு சுற்றுச்சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அம்மாபட்டி கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: