கால்வாயில் 14 மணிநேரம் சிக்கி தவித்த கன்றுக்குட்டி-தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்

வேலூர் : காட்பாடியில் 14 மணி நேரத்திற்கு மேலாக கால்வாயில் சிக்கிய கன்றுக்குட்டியை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.

காட்பாடி புதுபள்ளி குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ரகு, வீட்டில் கறவை மாடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை மேய்ச்சலுக்கு சென்ற கன்றுக்குட்டி காணாமல் போனது. இதனால் ரகு கன்றுக்குட்டியை பல இடங்களில் தேடியுள்ளார்.

இதற்கிடையில், நேற்று முன்தினம் இரவு வி.ஜி.ராவ் நகரில் உள்ள கால்வாயில் கன்றுக்குட்டி சிக்கியது தெரியவந்தது. இதையடுத்து நேற்று காலை காட்பாடி தீயணைப்பு துறையினருக்கு கால்வாயில் கன்றுக்குட்டி சிக்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று கன்றுக்குட்டியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். கால்வாய் சிறியதாக இருந்தால், கன்றுக்குட்டியை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து கால்வாயை உடைத்து கன்றுக்குட்டியை மீட்டு, உரிமையாளர் ரகுவிடம் ஒப்படைத்தனர்.

Related Stories: