கம்பம் சேனை ஓடையில் கொட்டும் குப்பையால் தேங்கும் கழிவுநீர்: அகற்ற கோரிக்கை

கம்பம்: கம்பம் சேனை ஓடையில் கொட்டப்படும் குப்பைகளால் கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி நிற்கிறது. இதனால் கடும் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. கம்பம் நகரின் மைய பகுதியில் செல்கிறது சேனை ஓடை. நகரில் உள்ள வீடுகள், கடைகள், ஓட்டல்களில் இருந்து வெளியேறும் கழிவுநீர் இந்த ஓடையில்தான கலக்கிறது.கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நகராட்சி நிர்வாகம் ஓடையில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி தூர்வாரியது. அதன்பின் ஓடையில் மழைநீரும், கழிவுநீர் தடையின்றி சென்றது. தற்போது காமராஜர் சிலை அருகே கம்பம் தேசிய நெடுஞ்சாலையில் சேனைஓடை குறிக்கிடும் பாலத்தின் அடியில், குப்பை- இறைச்சி கழிவுகளால் கழிவுநீர் வெளியேற முடியாமல் தேங்கி நிற்கிறது.

இதனால் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், கொசுக்கள் பெருக்கத்தால் நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே பாலத்தின் அடியில் இருக்கும் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து நகராட்சி அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, ‘ஓடையில் கழிவுநீர் தடையின்றி செல்ல வேண்டும் என்பதற்காகத்தான் தூர்வாரப்பட்டது. குப்பை கொட்ட கூடாது என தெரிந்தும் ஒரு சில கடைக்காரர்கள் குப்பை, இறைச்சி கழிவுகளை கொட்டுகின்றனர். கடைக்காரர்கள் ஒத்துழைப்பு தந்தால்தான் நகராட்சி செய்யும் பணிக்கு பலன் கிடைக்கும்’ என்றார்.

Related Stories:

>