பாஜகவில் இணைய வாயப்பு?: கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக திரிணாமுல் காங்கிரஸ் பெண் எம்எல்ஏ நீக்கம்.!!!

கொல்கத்தா: திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அமைச்சர் ஒருவர் ராஜினாமா செய்த சில மணி ேநரத்தில், திரிணாமுல் கட்சியை சேர்ந்த பெண் எம்எல்ஏ ஒருவர் கட்சியில் இருந்து திடீரென நீக்கப்பட்டார். மேற்குவங்கத்தில் முதல்வர் மம்தா தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. வரும் மார்ச் மாதத்தில் பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன் சுவேந்து அதிகாரி என்ற அமைச்சர் திரிணாமுல் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். ேநற்று மம்தா அமைச்சரவையில் வனத்துறை அமைச்சராக இருந்த ராஜீப் பானர்ஜி என்பவர், தனது பதவியை திடீெரன ராஜினாமா செய்தார்.

இவர், வரும் 30ம் தேதி கொல்கத்தா வரும் அமித் ஷா முன்னிலையில் பாஜகவில் இணைய வாய்ப்புள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இந்நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பாலி நகரைச் சேர்ந்த பெண் எம்எல்ஏ பைஷாலி டால்மியா என்பவர், கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக கூறி, அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘என்னை கட்சியில் இருந்து நீக்கியது தொடர்பாக எந்தவொரு எழுத்து பூர்வமான கடிதமும் கிடைக்கவில்லை. என்னை கட்சியில் இருந்து வெளியேற்றிய தகவல், செய்தி சேனல்கள் மூலம் அறிந்து கொண்டேன். என்னை கட்சியில் இருந்து நீக்கியதற்கான காரணத்தை கட்சி தலைமை தௌிவு படுத்த வேண்டும்.

எழுத்து பூர்வமான கடிதம் அளிக்க வேண்டும். மக்களுக்கு சேவை செய்வதற்காக அரசியலில் சேர்ந்தேன். தொடர்ந்து பொதுமக்களுக்காக பணியாற்றுவேன். நான் அரசியலை விட்டு வெளியேறவில்லை. அரசியல் மூலம் தொடர்ந்து மக்களுக்கு சேவை செய்வேன். பாஜகவில் இணைவு குறித்து கேட்கிறார்கள். ஆனால் இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை’ என்றார்.

Related Stories: