தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகள் பிப்ரவரி 18-ம் தேதி திறக்கப்படும்: அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகள் பிப்ரவரி 18-ம் தேதி திறக்கப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. 2,3-, ஆண்டு மாணவர்களுக்கு பிப்ரவரி 18 முதல் மே 21 வரை வகுப்புகள் நடைபெறும். பி.இ. 2,3-ம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு மே 24-ல் செய்முறை தேர்வு; ஜூன் 2-ல் செமஸ்டர் தேர்வு தொடங்கும் எனவும் அறிவித்துள்ளது. கொரோனா தொற்று காரணமாக 10 மாதங்களுக்கு மேலாக பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாமல் இருந்து வருகிறது. 3ம் ஆண்டு மற்றும் ஆராய்ச்சி மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் திறக்கப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து, 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நேற்று முதல் பள்ளிகளும் திறக்கப்பட்டு, வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள பொறியியல் மாணவர்களுக்கான வகுப்புகள் குறித்த அறிவிப்பை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 2ம் ஆண்டு மற்றும் 3ம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் பிப்.18ம் தேதி தொடங்கி, மே 21ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, மே 24ம் தேதி செய்முறை தேர்வுகளும், ஜுன் 2ம் தேதி எழுத்துத் தேர்வும் நடைபெறுகிறது. இதேபோல, இறுதி செமஸ்டர் மாணவர்களுக்கு வரும் பிப்ரவரி 14ம் தேதி முதல் ஏப்.12ம் தேதி வரை வகுப்பு நடத்தப்படுகிறது. ஏப்.15ம் தேதி முதல் செய்முறைத் தேர்வும், ஏப்.26ம் தேதி முதல் எழுத்துத் தேர்வும் நடத்தப்பட இருக்கிறது.

Related Stories:

>