பந்தலூர் அருகே தேயிலைத்தோட்டத்தில் மலைப்பாம்பு பிடிபட்டது

பந்தலூர்: பந்தலூர் அருகே சேரம்பாடி சோலாடி தனியார் தேயிலைத்தோட்டத்தில் மலைப்பாம்பு பிடிபட்டது. பந்தலூர் அருகே சேரம்பாடி தனியார் தேயிலைத்தோட்டம் பகுதியில் நேற்று ஏராளமான பெண்கள் பசுந்தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மலைப்பாம்பு ஒன்று ஊர்ந்து செல்வதை பார்த்த தொழிலாளர்கள் பீதியில் சத்தமிட்டு தோட்ட நிர்வாகத்திடம் தகவல் தெரிவித்தனர்.அவர்கள் சேரம்பாடி வனத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

ரேஞ்சர் ஆனந்தகுமார் உத்தரவின்பேரில் வனவர் சசிகுமார், வனக்காபாளர் கிருபானந்தகுமார் மற்றும் சமூக ஆர்வலர் தம்பா என்கிற ராஜ்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று சுமார் ஒரு மணி போராட்டத்திற்குப்பின்  மலைப்பாம்பை பிடித்தனர். சுமார் 15 நீளமுள்ள மலைப்பாம்பை சேரம்பாடி அருகே உள்ள கோட்டமலை வனப்பகுதியில் விட்டனர் அதனால் தொழிலாளர்கள் நிம்மதி அடைந்தனர்.

Related Stories: