உடல்நலம் பாதிக்கப்பட்ட சசிகலா பெங்களூருவில் உள்ள பவுரிங் அரசு மருத்துவமனையில் அனுமதி...! அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு

பெங்களூரு: உடல்நலம் பாதிக்கப்பட்ட சசிகலா பெங்களூருவில் உள்ள பவுரிங் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 2 நாட்களாகவே காய்ச்சல் மற்றும் இருமலால் சசிகலா அவதிப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், மேல் சிகிச்சைக்காக பெங்களூரு அரசு மருத்துவமனைக்கு சசிகலா அழைத்து செல்லப்பட்டார்.

சொத்துகுவிப்பு வழக்கில் கடந்த 2017ம் பிப்ரவரி 15ம் தேதி முதல் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில் சசிகலாவின் தண்டனை காலம் வரும் 27ம் தேதியுடன் முடிவடைவதால், அவரை அன்று விடுதலை செய்வதாக கர்நாடக சிறை துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த நிலையில் இன்று பிற்பகல் சிறையில் இருந்த சசிகலாவுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.

உடனடியாக மருத்துவக்குழு அவரது அறைக்கு விரைந்தது. அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக பெங்களூருவில் உள்ள பவுரிங் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்ட சசிகலாவுக்கு சிறையில் பரிசோதனை செய்யப்படுகிறது. சசிகலாவுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட வாய்ப்பு என தகவல் தெரியவந்துள்ளது.

Related Stories:

>