டிராகன் பழ வகைக்கு கமலம் என பெயர் மாற்றம் செய்தது குஜராத் அரசு... அரசியல் ஏதும் இல்லை என முதல்வர் விளக்கம்!!

காந்திநகர் : தாமரை வடிவ டிராகன் பழ வகைக்கு கமலம் (தமிழில் அர்ததம் தாமரை) என குஜராத் அரசு பெயர் மாற்றம் செய்துள்ளது. ஆனால் இந்த முடிவில் அரசியல் ஏதும் இல்லை என அம்மாநில முதல்வர் விஜய் ரூபானி மழுப்பலாக விளக்கம் அளித்துள்ளார். குஜராத் முதல்வர் விஜய் ரூபானி, தோட்டக்கலை வளர்ச்சி திட்டத்தை நேற்று துவக்கி வைத்தார்.

பிறகு நிரூபர்களுக்கு பேட்டி அளித்த அவர், டிராகன் பழகத்திற்கு அந்த பெயர் பொருத்தமானதாக இல்லை. அதனால் அதற்கு கமலம் என பெயர் சூட்ட முடிவு செய்துள்ளோம்.  டிராகன் என்ற பெயர் சரியாக உச்சரிக்கப்படுவதில்லை. கமலம் என்ற சொல், சமஸ்கிருத சொல். இந்த பழம் தாமரை வடிவத்தை கொண்டுள்ளதால் கமலம் என இப்போது முதல் இந்த பழம் கமலம் என அழைக்கப்படும். இதில் அரசியல் ஏதும் இல்லை. இந்த பெயரை வைக்க வேண்டும் என யாரும் சொல்லவில்லை, என்றார்.

தாமரை, பாஜக.,வின் சின்னம் என்பதை தாண்டி பாஜக.,வின் அடையாளமாக மாறி உள்ளது. காந்திநகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்திற்கு கூட ஸ்ரீ கமலம் என்று தான் பெயர் வைத்துள்ளனர். இந்த நிலையில் குஜராத் முதல்வர் அளித்துள்ள விளக்கம் ஏற்கப்படுவதாக இல்லை என எதிர்க்கட்சிகள் கருத்து தெரிவித்துள்ளன

Related Stories: