மேற்கு வங்காளத்தில் பனிமூட்டம் காரணமாக நடந்த சாலை விபத்தில் 13 பேர் உயிரிழப்பு

மேற்கு வங்கம்: மேற்கு வங்காளத்தில் பனிமூட்டம் காரணமாக நடந்த சாலை விபத்தில் 13 பேர் உயிரிழந்தனர். மேற்கு வங்காளம் ஜல்பைகுரி மாவட்டம் துப்குரியில் நேற்று இரவு பனிமூட்டம் காரணமாக நடந்த சாலை விபத்தில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் பிரேதங்களை கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

நேற்று இதேபோல் பனிமூட்டம் காரணமாக குஜராத் மாநிலம் சூரத்தில் சாலையோரம் தூங்கிக்கொண்டிருந்த பொதுமக்கள் மீது கரும்பு ஏற்றி வந்த வாகனம் ஏறியதில் 13 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 6 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். எனவே இந்த ஆண்டு பனி மூட்டம் அதிக அளவில் காணப்படுகிறது.

Related Stories:

>