மூலவைகை வெள்ளத்தால் 20 வீடுகள் சேதம்: ஜல்லிக்கட்டு காளை பலி

வருசநாடு: நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழையால் அரசரடி, பொம்முராஜபுரம், இந்திராநகர், நொச்சி ஓடை, காந்தி கிராமம், வாலிப்பாறை, சீலமுத்தையாபுரம் ஆகிய பகுதி மூல வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் வண்டியூர், வீரசின்னம்மாள்புரம், செல்வராஜபுரம் ஆகிய மலைக் கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. மேலும், வாலிப்பாறையைச் சேர்ந்த பாண்டி என்பவருக்கு ரூ.1 லட்சம் மதிப்பிலான ஜல்லிக்கட்டு காளை, அதே ஊரைச் சேர்ந்த பெத்தனன் என்பவர் குதிரை ஆற்றில் இழுத்து செல்லப்பட்டு இறந்தன.

 இந்நிலையில், கடமலைக்குண்டு கோம்பைத்தொழு, தங்கம்மாள்புரம், தும்மக்குண்டு, முத்தலாம்பாறை உள்ளிட்ட பகுதியில் 20க்கும் மேற்பட்ட மண் வீடுகள் இடிந்து சேதமடைந்துள்ளது. வெள்ளத்தால் சேதமடைந்த பகுதிகளை ஆண்டிபட்டி தாசில்தார் சந்திரசேகரன் மயிலாடும்பாறை வருவாய் ஆய்வாளர் முருகன், கிராம நிர்வாக அலுவலர்கள் அன்பழகன், தங்கமாரிமுத்து, பால்குமார், தலையாரிகள் ஞானேஸ்வரன், பாண்டி, பார்வையிட்டு வருகின்றனர்.இதனைத் தொடர்ந்து மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்கள் முத்துபாண்டி, திருப்பதிவாசகன் ஆகியோர் சேதமடைந்த பகுதிகளை ஆய்வு செய்து கிராமப் பகுதிகளில் தண்ணீரை காய்ச்சி குடிக்க வலியுறுத்தி வருகின்றனர்.

Related Stories: