ஓரங்கட்டப்பட்ட பேட்டரி வாகனங்கள் மலை போல் தெருக்களில் குவியும் குப்பை : அருப்புக்கோட்டை நகராட்சி அலட்சியம்

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. சுகாதாரப் பணிக்காக நகரை 6 பிரிவாக பிரித்துள்ளனர். இவற்றில்  108 தூய்மை பணியாளர்களும், ஒப்பந்த அடிப்படையில் 120 தூய்மை பணியாளர்களும் பணியாற்றுகின்றனர். நகராட்சிக்குட்பட்ட வீடுகளில் சேகரமாகும் குப்பைகளை  6 மையங்களில் அமைக்கப்பட்டுள்ள உரக்குடில்களுக்கு எடுத்துச் செல்ல பேட்டரியால் இயங்கும் 70 மினி குப்பை வாகனங்கள் 2 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கப்பட்டது. தினமும் 6 மணிநேரம் சார்ஜ் செய்து இந்த வாகனங்களை பயன்படுத்தி வந்தனர்.

ஆண்டுக்கு ஒருமுறை பராமரிக்காமல் விட்டதால் 70 வாகனங்களும்  இயங்காமல் நகராட்சி அலுவலகத்தில் கேட்பாரன்று முடங்கி கிடக்கின்றன. இதனால் நகர்முழுவதும் குப்பைகள் தேங்கிக் கிடக்கிறது. இதனால் தூர்நாற்றம் வீசுவதுடன்  கொசுத்தொல்லையும் அதிகரித்துள்ளது. இதனால் ேநாய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நகராட்சி நிர்வாகம் அலட்சியத்தால் துப்புரவு பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. எனவே, குப்பையை உடனுக்குடன் அகற்ற பேட்டரி வாகனங்களை சரி செய்யவதுடன், பராமரிப்பு பணிகளுக்கு அனுப்பபட்ட லாரிகளையும் சரி செய்ய நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: