பொன்னமராவதி பகுதியில் தொடர்மழையால் நெற்கதிர்கள் சாய்ந்து வீணானது

பொன்னமராவதி: பொன்னமராவதி பகுதியில் தொடர் மழையால் நூற்றுக்கணக்கான ஏக்கர் நெற்கதிர்கள் சாய்ந்து வீணானது. இதற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்். புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பகுதியில் கடந்த ஒரு வாரமாக சாரல் மழை பெய்து வந்தது. இந்த தொடர் மழையினால் பொன்னமராவதி பகுதிகளான திருக்களம்பூர், கருப்புக்குடிப்பட்டி, வார்பட்டு, மேலைச்சிவபுரி, மைலாப்பூர், அஞ்சுப்புளிப்பட்டி, கேசராபட்டி, கண்டியாநத்தம், ஆலவயல், கல்லம்பட்டி, நகரப்பட்டி, செம்பூதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் நெற்பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு கதிர்கள் நன்கு விளைச்சல் பெற்றிருந்தது.

இந்நிலையில் விளைந்த நெற்கதிர்கள் மழையால் வயலிலேயே சாய்ந்து சேதமாகின. இதனைப் பார்த்த விவசாயிகள் நெற்கதிர்கள் சாய்ந்து போனதால் வேதனையடைந்தனர். மேலும் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டுமேன விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: